News December 27, 2025

தவறான தகவல் அளித்தால் 1 ஆண்டு சிறை: ECI

image

வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என ECI தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் 2002/2005 SIR பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் விவரங்களை தெரிவிப்பது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 3, 2026

‘அரசன்’ படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கும் சிம்பு!

image

அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 11 நாள்களாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், 1980, 1992, 1995 காலகட்டங்களில் கதை நிகழ்வதால், சிம்பு 3 கெட்டப்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர், சென்னையில் கேங்ஸ்டராக மாறுவதை சுற்றி கதை நகர்வதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 3, 2026

ராசி பலன்கள் (03.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 3, 2026

நடிகையை சம்பளத்துடன் டேட்டிங் அழைத்த நபர்

image

பணம் கொடுத்து தன்னை டேட்டிங் அழைத்த தொழிலதிபர் பாலாஜி என்பவரை நடிகை சனா அல்தாஃப் அம்பலப்படுத்தியுள்ளார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேளுங்கள் எனவும், மாலத்தீவு அல்லது துபாய்க்கு அழைத்து செல்ல தயாராக இருப்பதாகவும் பாலாஜி மெயில் அனுப்பியுள்ளார். ‘வாவ் என்னவொரு ரொமாண்டிக் புரபோசல்’ என கேப்ஷனுடன், மெயிலின் ஸ்கிரீன்ஷாட்களை நடிகை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!