News April 25, 2024
தவறான செய்தி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை

கள்ளழகர் திருவிழாவில் நேற்று இருவருக்கு கத்தி குத்து விழுந்தது. இதில் சோணை என்பவர் பலியானார். கார்த்திக் என்பவர் மனைவிக்கும் சதீஷ் என்பவருக்கும் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உளவு, காரணமாக இந்த கத்தி குத்து சம்பவம் நடைபெற்றது. ஆனால் சமூக வலைத் தளங்களில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு என செய்தி பரவுகிறது. தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.
Similar News
News July 6, 2025
அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணை – எஸ்.பி உத்தரவு

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோர் வழக்கு ஒன்றுக்காக அலங்காநல்லூர் காவல்நிலையம் வந்தபோது, காவலர்களால் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் மாவட்ட காவல்துறை எஸ்.பி உத்தரவின் பேரில் சமயநல்லூர் டி.எஸ்.பி விசாரணை மேற்கொள்வார் என பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
News July 6, 2025
மமக மாநாடு – போக்குவரத்து மாற்றம்

பாண்டி கோவிலில் நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டிற்காக மதுரை காவல்துறை போக்குவரத்து ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. ராமநாதபுரம் சாலை, கோரிப்பாளையம், தத்தனேரி, காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டு, சர்வேயர் காலனி, பொன்னகரம், எஸ்.எஸ். காலனி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும். இது பொதுமக்களுக்கு தொந்தரவில்லாத பயணத்தை உறுதி செய்யும். இன்று மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது.
News July 6, 2025
மதுரையில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

மதுரை மக்களே தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு<