News April 14, 2025
தவறான சிசிச்சையால் ஒருவர் உயிரிழப்பு

நல்லம்பள்ளியில் தவறான சிகிச்சையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோமியோபதி மருத்துவம் படித்த கிருஷ்ணசாமி காலில் காயத்துடன் வந்த கோவிந்தராஜிக்கு அலோபதி சிகிச்சை அளித்ததில் உயிரிழந்தார். விஷயம் வெளியே தெரியாமல் இருக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரின் குடும்பத்தினரிடம் ரூ. 10 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அங்கு மாவட்ட சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News April 15, 2025
மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 14, 2025
ஒகேனக்கல் அருகே சிறுமிகள் நீரில் மூழ்கி இறப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் விடுமுறைக்கு ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, பாக்கிய லட்சுமி மற்றும் காவியா இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்றதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது . தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News April 14, 2025
தூய்மை பணியாளர்களை இரவு நேரங்களில் பணி செய்ய நிர்பந்தம்

தருமபுரி நகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளர்களை இரவு நேரங்களில் பணியாற்ற நிர்பந்திப்பதை தடுக்கக் கோரி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் “ பெண் தூய்மைப் பணியாளர்கள் இரவு 11 மணி வரை வேலை செய்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்’ என்றார்