News October 26, 2024
தள்ளுவண்டி உணவு கடைகளுக்கு இலவச உரிமம்
கோவையில் தள்ளுவண்டி உணவு கடைகள் அதிகம் உள்ளன. அவர்களின் ஏழ்மையை கருத்தில் கொண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், உணவு பாதுகாப்பு உரிமம் இலவசமாக வழங்கப்படுகிறது. உரிமம் பெற வியாபாரிகள், https://foscos.fssai என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று கோவை கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
கோவை: கல்வி உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவர்கள் 2024–25ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற https://bcmbcmw.tn.gov.in/ welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 53 மனுக்கள் பெறப்பட்டன
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 53 கோரிக்கை மனுக்கள் மக்கள் அளித்தனர். அதை பெற்ற மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
News November 19, 2024
கோவை: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
2024-2025 ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் (22.11.2024)-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார்.