News December 25, 2025
தலை குந்தாவிற்கு செல்ல வனத்துறை கட்டுப்பாடு!

நீலகிரியின் காஷ்மீர் என அழைக்கப்படும் தலைகுந்தா வனப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.
Similar News
News December 27, 2025
ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சர்க்யூட் பஸ் சேவை

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டதாலும் , தொடர் விடுமுறை காரணமாகவும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவர்கள் சுற்றுலாத் தளங்களுக்கு சென்று எளிதில் கண்டு களிக்கும் வகையில் அரசு சர்க்யூட் பஸ் சேவை இன்று முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை செயல்படுத்தப்படுகிறது.
News December 26, 2025
நீலகிரி: மாதம் ரூ.13,000 உதவித்தொகை APPLY NOW

நீலகிரி மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (BOI) தேசிய அளவிலான தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 இடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.13,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News December 26, 2025
JUSTIN: கூடலூரில் பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் தேவர்சோலை எஸ்டேட் சதுப்பு நிலப்பகுதியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க யானை ஒன்று நேற்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள உள்ள சேற்றில் சிக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து வன கால்நடை மருத்துவரால் இன்று உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் வனப்பகுதியில் யாயை புதைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


