News March 26, 2024
தலைவாசல்: ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல்

தலைவாசல் நத்தகரை டோல்கேட்டில் நேற்று(மார்ச் 25) தோட்ட கலைத்துறை உதவி இயக்குநர் ஞானப்பிரியா தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், உரிய ஆவணம் இல்லாத ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 625 இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அந்த நபர் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News August 22, 2025
சேலம்: ரூ.67,100 சம்பளம்: POLICE வேலை! APPLY NOW

சேலம் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
மாமாங்கம் மேம்பாலம் இன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது

சேலம்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (ஆக.22) திறக்கப்பட்டது. இதனால் அந்த சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,லாரி,பேருந்து ஓட்டுநர்கள்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் அறவே குறையும் என எதிர்பார்ப்பு!
News August 22, 2025
விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு

பால் உற்பத்தி செய்ய கால்நடைகளுக்கான அடர் தீவனம், உலர் தீவனம்,பசுந்தீவனம் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் பால் கொள்முதல் விலை,விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை.
பசும் பால் மற்றும் எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்க வேண்டும்.செப்-22ல் சேலம் ஆவின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ஆர்.வேலுசாமி அறிவிப்பு