News March 22, 2024

தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளித்த தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News April 10, 2025

119 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில், 119 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான பெண்கள், வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் www.tirunelveli.nic.in மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News April 10, 2025

நெல்லை: ம.சு பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதிலிருந்து தற்போது கல்லூரியில் வேலை செய்யும் வரை தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை வேதியியல் துறை பேராசிரியர் கொடுப்பதாக தற்காலிக பேராசிரியர் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்திற்கும் உயர்கல்வி துறைக்கும் மனு அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழகம் விசாரிக்க தமிழக உயர் கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 10, 2025

12ஆம் தேதி ரேஷன் அட்டை குறைதீர்க்கும் முகாம்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் நேற்று (ஏப்ரல் 9) விடுத்துள்ள செய்தி குறிப்பு: வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளன. புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மனு அளித்து பலனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!