News September 13, 2024
தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திறந்திருந்த பேக்கரியை உரிமையாளரிடம் மூடச் சொல்லி இருக்கிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், கார்த்திக்கை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். SHAREIT
Similar News
News October 21, 2025
திருச்சி: ரயில்வே கோட்ட மேலாளர் அறிவிப்பு

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் பாலக்ராம் நெகி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருச்சி கோட்டத்தில் அக்.1ம் தேதி முதல் இன்று வரை 116 ரயில் இயக்கப்பட்டு, மொத்தம் 21,68,395 பயணிகள் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்யப்படாத பிரிவில் 16,63,296 பயணிகளும் முன்பதிவு செய்யப்பட்ட பிரிவில் 5,05,099 பயணிகளும் பயணம் செய்துள்ளதாக’’ தெரிவித்தார் அவர்.
News October 21, 2025
திருச்சி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தினை பொறுத்து திருச்சி முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே பருவமழை காலம் முடிவடையும் வரை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
திருச்சி: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம்.