News February 10, 2025
தலைமை ஆசிரியருக்கு “ராஜகலைஞன்” விருது

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இள.செல்வமணிக்கு, நேற்று (பிப்.9) திருச்சியில் தமிழக பண்பாட்டுக் கழகம் நடத்திய 29ஆவது விருது வழங்கும் விழாவில் “ராஜகலைஞன்” விருதினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். விருது பெற்ற தலைமை ஆசிரியர் இள.செல்வமணியை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோர் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
உங்களுடன் முதல்வர் முகாம் விண்ணப்பம் வழங்கல்

திருவாரூர் நகர்ப் பகுதிக்கு உட்பட்ட மேலவடபோக்கித் தெருவில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாமின் விண்ணப்பத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், இன்று (ஜூலை 8) மேலவடபோக்கி தெரு பகுதி மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார். இதில் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், திமுக நகரச் செயலாளர் வாரை பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
News July 8, 2025
திருவாரூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (1/2)

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<16989990>>(பாகம்-2)<<>>
News July 8, 2025
திருவாரூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!