News March 17, 2025
தலைமைக் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தலைமைக் காவலர் சீனிவாசன்(40) மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்தார். விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த இவர், கஞ்சா விற்பனை செய்த கலாநிதிமாறனை பிடிக்க சென்றபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சக காவலர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
Similar News
News September 16, 2025
விழுப்புரம்: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News September 16, 2025
விழுப்புரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<
News September 16, 2025
மக்கள் குறைதீர் கூட்டம் கூட்டத்தில் 448 மனுக்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நேற்று செப். 15 மக்கள் குறைதீர் கூட்டம் கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை கோருதல், பட்டா வழங்கக் கோருதல், பட்டா பெயா் மாற்றம், கல்விக் கடன், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 448 மனுக்களை அளித்தனா். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.