News January 5, 2026
தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதால் வரும் ஆபத்துகள்!

முடி வளர தலைக்கு அதிகமாக எண்ணெய் தடவுறீங்களா? இதனால்தான் உங்கள் முடி நாசமாகிறது என டாக்டர்கள் சொல்கின்றனர். ஆம், தினமும் எண்ணெய் வைப்பதால் அந்த எண்ணெய் Scalp-ல் தேங்கி முடியை வளரவிடாமல் செய்கிறது. தலையில் எண்ணெய் இருக்கும்போது தூசியும், அழுக்கும் எளிதில் சேரும். இதனால் பொடுகு, சரும பிரச்னைகள் ஏற்படும். இதனால் வாரத்திற்கு இருமுறை மட்டும் எண்ணெய் தடவி, 1 மணி நேரம் கழித்து குளித்துவிடுங்கள். SHARE.
Similar News
News January 7, 2026
BREAKING: பொங்கல் பரிசு.. CM ஸ்டாலின் அடுத்த அறிவிப்பு

நாளை (ஜன.8) முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட ₹3,000 பரிசுத் தொகையை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நாளை முதல் தொடங்கவுள்ளது. இதற்காக டோக்கன் விநியோகிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜன.13 வரை பொங்கல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
News January 7, 2026
பாடம் நடத்துவதா? நாய்களை எண்ணுவதா?

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி என ஏற்கனவே பணிச்சுமையில் தவிக்கும் பிஹார் ஆசிரியர்களுக்கு இப்போது ‘நாய் கணக்கெடுப்பு’ பணியும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நோடல் அதிகாரியாக நியமித்து, தெருநாய்களின் எண்ணிக்கை, உடல்நிலையை பட்டியலிட சாசாராம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதனால், ‘பாடம் நடத்துவதா? அல்லது வீதி வீதியாக நாய்களை எண்ணுவதா?’ என ஆசிரியர்கள் வேதனையுடன் குமுறுகின்றனர்.
News January 7, 2026
மம்தாவுக்கு மனநல சிகிச்சை தேவை: பாஜக

மே.வங்கத்தில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு, பாஜக IT செல் உருவாக்கிய APP-ஐ ECI பயன்படுத்துவதாக <<18784581>>மம்தா பானர்ஜி<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் (பாஜக) சுவேந்து அதிகாரி, மம்தாவுக்கு மனநல சிகிச்சை தேவை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படி சிகிச்சை பெறவில்லையெனில், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


