News August 6, 2025

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

image

பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் 2022ல் வயதான தம்பதியை கட்டிப்போட்டு 30 லட்சம் ரூபாயை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் கமுதி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பள்ளிப்பாளையம் போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Similar News

News August 17, 2025

பருத்தியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த இலவச பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு “பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்” என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News August 17, 2025

நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (17-08-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ. 95-க்கும், முட்டை கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.97-ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ.4.90- ஆகவும் நீடித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

News August 17, 2025

நாமக்கல்: வங்கி அதிகாரி வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க!

image

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வங்கி அதிகாரியாக பணியாற்ற சூப்பர் வாய்ப்பு உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!