News December 11, 2025

தலைகீழாய் காட்சி தரும் சிவபெருமான்!

image

ஆந்திரா, பீமாவரத்தில் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயத்தில் சிவன் தலைகீழாய் காட்சி தருகிறார். சம்பாசுரன் என்ற அரக்கன் யமபுரியை கைப்பற்ற, யமன் சிவனை நோக்கி தவம் புரிந்தார். அப்போது சிவன், தற்போது கோயிலுள்ள இடத்தில் சிரசாசனத்தில் தியான நிலையில் இருந்தார். எனவே, பார்வதியின் அருளுடன் அசுரனை கொன்ற யமன், பின் இங்கு வந்து இறைவனை வழிபட்டாராம். இக்கோயில் யமபயத்தை போக்கும் எனப்படுகிறது.

Similar News

News April 4, 2026

முலாம் பழ விதையில் இவ்வளவு ஆரோக்கியமா?

image

குறைந்த விலையில் கிடைக்கும் முலாம்பழ விதைகளில் புரதம், மெக்னீசியம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்டவை கொட்டிக் கிடக்கின்றன. இதை தினமும் சாப்பிடுவதால் இதயம் & மூளை ஆரோக்கியம் மேம்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். செரிமான பிரச்னைகள் குறையும்; ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் சருமத்தின் பளபளப்பையும் அதிகரிக்குமாம். SHARE IT

News April 4, 2026

விஜய் ஒரு சிங்கம்: TN 2026 பட இயக்குநர்

image

நட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘TN 2026’ படம் விஜய்யின் அரசியல் பயணத்தோடு ஒன்றி உள்ளதாகவும், விஜய்யை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவர் (விஜய்) ஒரு சிங்கம், சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா என்று பட இயக்குநர் உமாபதி ராமையா விளக்கமளித்துள்ளார். இப்படத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

News April 4, 2026

1 லிட்டர் பெட்ரோல் ₹2 மட்டுமே.. எங்கு தெரியுமா?

image

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருளுக்கு திண்டாட்டம் நிலவுகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹520-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 1 லிட்டர் ₹101-க்கு விற்பனையாகிறது. ஆனால், லிபியாவில் 1 லிட்டர் பெட்ரோல் இந்திய மதிப்பில் வெறும் ₹2.18 தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், எண்ணெய் வளம் மிகுந்த லிபியாவில் தான், உலகிலேயே பெட்ரோல் விலைக் குறைவாம்.

error: Content is protected !!