News August 18, 2024

தலித் மக்கள் முதலமைச்சராக வந்தால் வரவேற்போம்

image

திருச்சியில் இன்று நடந்த மமக கட்சி இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒருபோதும் தலித் மக்கள் முதல்வராக முடியாது என திருமாவளவன் கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் அதிக அளவில் தலித் மக்கள் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் முதலமைச்சராக வந்தால் நாங்கள் வரவேற்போம்” என தெரிவித்தார்.

Similar News

News November 9, 2025

திருச்சி: 12.89 லட்சம் கணக்கீட்டு படிவம் விநியோகம்

image

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (நவ.8) மாலை வரை 12 லட்சத்து 89 ஆயிரத்து 649 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

திருச்சி: 8-ஆம் வகுப்பு போதும், அரசு வேலை ரெடி!

image

தமிழக நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள <>’இங்கே’<<>> க்ளிக் செய்யவும். SHARE!

News November 8, 2025

திருச்சி: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

image

திருச்சி மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <>parivahan.gov.in <<>>என்ற இணையத்தில் Drivers/Learners Licence-க்குள் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!