News September 12, 2025

தற்செயல் விடுப்பு போராட்டம் – 1473 ஊழியர்கள் ஆப்செண்ட்

image

விருதுநகர் மாவட்டத்தில் ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில், மாவட்ட முழுவதிலும் 1473 பேர் ஆப்செண்ட் ஆகினார். இதன்காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Similar News

News September 12, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் – கலெக்டர் தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (13.09.2025) நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

விருதுநகர்: பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்..!

image

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் மற்றும் போலீசார் 56 வீட்டு காலனி பகுதியில் உள்ள குடோனில் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோனில் சட்டவிரோதமாக 5 அட்டை பெட்டிகளில் பேன்சி வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு இருந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 32), முருகன் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

News September 12, 2025

விருதுநகர்: ரேஷன் கடையில் பொருட்கள் தரவில்லையா?

image

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க.
▶️ராஜபாளையம் – 04563220500
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
▶️சாத்தூர் – 04562260220
▶️சிவகாசி – 04562224260
▶️விருதுநகர்- 04562243493
▶️அருப்புக்கோட்டை – 04566220219
▶️திருச்சுழி – 04566282222
▶️காரியாபட்டி – 04566255570
▶️வெம்பக்கோட்டை – 04562284202
▶️வத்திராயிருப்பு – 04563288800

error: Content is protected !!