News September 3, 2025
தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விரும்புவோர், வரும் அக்டோபர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளி, அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
Similar News
News April 10, 2026
சங்கராபுரம்: திருமாவை சந்தித்த திமுக வேட்பாளர்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று(ஏப்.9) இரவு தனது தேர்தல் பரப்புரையை நிறைவு செய்த பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சங்கராபுரம் திமுக வேட்பாளர் உதயசூரியனை நேரில் சந்தித்து வாழ்ந்து பெற்றார்.
News April 10, 2026
சின்னசேலம் அருகே துடித்துடித்து பலி!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த பி.ஏ.அம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி(64). விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நிலத்தில் இருந்த காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்தி அதனை தீ வைத்து கொளுத்தும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், படுகாயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
News April 9, 2026
கள்ளக்குறிச்சி 250 கோழிகள் இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


