News March 31, 2025

தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் மூதாட்டி பலி

image

மாவடியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மாரிமுத்து. இவர் நேற்று பேட்டை கிருஷ்ணபேரி அருகே லாரியை ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி அவ்வழியாக வந்த பைக் மீது மோதியது. இதில் கண்டியபெரியை சேர்ந்த மூதாட்டி செல்லம்மா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து சந்திப்பு போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

Similar News

News April 4, 2025

நெல்லையில் விரைவில் புதிய வருவாய் குறுவட்டங்கள்

image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய்த்துறை சம்பந்தமான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய வருவாய் குறுவட்டங்கள் மற்றும் புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

News April 4, 2025

திருநெல்வேலியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

நெல்லையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி, கணக்காளர், விற்பனை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படங்கள் உள்ளது. இதில் இளங்கலை பட்டம் பெற்ற 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் ஏப்.30 க்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு செய்தியை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!