News December 13, 2024
தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்

கோவை, மதுக்கரை மரப்பாலம் பகுதியில் மலை மேல் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை, பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சிவபெருமான்,நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்துடன் தீப ஒளியில் ஜொலித்த சிவபெருமான் மற்றும் நந்தி பகவானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.
Similar News
News March 9, 2026
வடவள்ளியில் எழுந்த சர்ச்சை! அண்ணாமலை குற்றச்சாட்டு

வடவள்ளி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்ற நபர் தனது வீடாக மாற்றி குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற செய்தி திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தை காட்டுகிறது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பாஜக முன்னாள் மாநிலதலைவர் அண்ணாமலை அரசை வலியுறுத்தியுள்ளார்.
News March 9, 2026
கோவை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி..?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
News March 9, 2026
கோவை: POST OFFICE வேலை! வெளியான RESULT

இந்திய போஸ்ட் ஆஃபிசில் அறிவிக்கப்பட்ட 28,740 ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான மெரிட் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பித்தவர்கள் இங்கு<


