News August 15, 2025
தர்மபுரி ஹோட்டலில் சாப்பிடுவோர் கவனத்திற்கு

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரே நாளில் 100 இடங்களில் ஆய்வு செய்தனர். இதில் பழைய சிக்கன், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டிகள், பலமுறை பயன்படுத்திய எண்ணெய்யை உபயோக படுத்திய கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதித்தனர். மேலும், பொதுமக்கள் உணவு தொடர்பாக 9444042322 என்ற எண்ணிலோ அல்லது <
Similar News
News November 14, 2025
சருமபுரி: குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (நவ.14) வாசித்தார். பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவி மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 14, 2025
குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆட்சியர் கையெழுத்து

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கலந்து கொண்டனர்.
News November 14, 2025
மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய ஆட்சியர்

தமிழ்நாடு துணை முதலமைச்சர், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை குழந்தைகள் தினமான இன்று (நவ.14) வழங்கி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், வழங்கி துவங்கி வைத்தார்கள்.


