News September 23, 2025
தர்மபுரி விவசாயிகளுக்கு இலவச பயிற்சி!

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு நாளை (செப். 24) பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கரும்பு, தென்னை சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தப் பயிற்சியில், பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் இதில் பங்கேற்றுப் பயனடைய வேளாண் திட்ட இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர்
Similar News
News September 23, 2025
தருமபுரி: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

தருமபுரியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<
News September 23, 2025
தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

* தர்மபுரி வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலகம், ஆண்டிஹள்ளி
* நல்லம்பள்ளி வட்டாரம் – சக்தி சுப்பிரமணியர் ஆலயம், லலிகம்
* மொரப்பூர் வட்டாரம் – சேவை மையம், வகுரப்பம்பட்டி
* கடத்தூர் வட்டாரம் – சமுதாயக் கூடம், மணியம்பாடி
* காரிமங்கலம் வட்டாரம் – சமுதாயக் கூடம், முருக்கம்பட்டி
* அரூர் வட்டாரம் – திறந்தவெளி வளாகம், அரசு மேல்நிலை ஆண்களை விடுதி, அருகில், மருதிபட்டி (SHARE IT)
News September 23, 2025
தர்மபுரி புத்தகப் பேரவை விழிப்புணர்வு வாகனம்

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா, தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியர் ரெ.சதீஸ், பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உடனிருந்தார்.