News September 28, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Similar News
News February 3, 2026
அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தருமபுரி மாவட்டம் அப்பாவு நகர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில வரும் 14-ம் தேதி அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு: 9486523986 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சதிஸ் அறிவித்து உள்ளார்.
News February 3, 2026
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நேற்று (பிப்.2) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 630 மனுக்கள் பெறப்பட்டன என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
தருமபுரு: SI-யிடம் எகிறிய ராணுவ வீரர்!

அடிலம் கிராமத்தில் நேற்று (பிப்.2) நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ராணுவ வீரர் கோகுல் (32) சாலையில் தனது டூவீலரை நிறுத்தி கூச்சலிட்டார். அப்போது எஸ்ஐ மதியழகன் வண்டியை எடுக்க கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கோகுல் எஸ்ஐ உட்பட 8 பேரை தாக்கி விட்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் பாரதி 27, பூபதி 18, மஞ்சுநாத் 19, ரமணன் 25 உட்பட 6 பேரை கைது செய்தனர்.


