News September 3, 2025
தர்மபுரி மாவட்டம் – செப்டம்பர் மாத மின்தடை அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் மின் வாரியத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்டம்பர்-2025 மாதம் முழுவதும் திட்டமிட்ட நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும். மாவட்டத்தின் பல ஊரக, நகர்புற பகுதிகள் மின்தடைக்கு உட்படுகின்றன. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News March 5, 2026
தருமபுரி இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி அறிவிப்பு!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் PMKVY 4.0 திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு முடித்த 18 முதல் 45 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
தருமபுரி: வாழ்க்கையில் எதிர்ப்புகள் நீங்கி வெற்றி பெற..!

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோயில், தென்னகத்தின் மிகச்சிறந்த பரிகாரத் தலமாகும். நம் வாழ்வின் தீராத வினைகளையும், எதிர்ப்புகளையும் நீக்கும் சக்தி படைத்தவர் இக்கோயில் காலபைரவர். குறிப்பாக தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால், ராகு-கேது தோஷங்கள் நீங்கி, தடைபட்ட காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர்!
News March 4, 2026
தருமபுரி நீதிமன்றத்தில் இலவச ஆலோசனை பெறுவது எப்படி?

தருமபுரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். தருமபுரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04342-233781, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


