News January 1, 2026

தர்மபுரி மாவட்டத்தில் 800 போலீசார் குவிப்பு

image

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 800 காவலாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இரு சக்கர வாகன சாகசங்களை தவிர்க்கும் வகையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு பணி ஈடுபட்டு உள்ளனர்.

Similar News

News January 3, 2026

தருமபுரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான 2 நாள் முகாம் நடைபெற உள்ளது. ஜனவரி 3, 4 ஆகிய நாட்களில் தருமபுரி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற சேவைகள் நடைபெரும். மேலும் இதில் மக்கள் கலந்துக்கொண்டு திருத்தங்களை மேற்கொள்ளும்படி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 3, 2026

தருமபுரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (ஜன.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. தருமபுரி நான்கு ரோடு அருகில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ள இம்முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல் போன்ற பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News January 3, 2026

தருமபுரியில் 410 போ் உயிரிழப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் 2025 கடந்த ஆண்டில் சாலை விபத்துகள் மூலம் மொத்தம் 410 போ் உயிரிழந்துள்ளனா். 2024-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 30 போ் அதிகம் என மாவட்ட நகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவித்துள்ளன. 2025-ல் சாலை போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 1,76,664 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 5 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!