News April 5, 2025
தர்மபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு இன்று கனமழையும் மற்றும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 5, 2025
தர்மபுரி பாஜகவில் ஆட்சேர்ப்புகாக நிர்வாகிகள் நியமனம்

தர்மபுரி மாவட்ட பாஜக சார்பில் மாற்றுக்கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் பொதுமக்கள், மற்றும் VVIP-க்களை கட்சியில் இணைக்கும் பணிகளை செய்வதற்காக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காரிமங்கலம் கிழக்கு-ராமகிருஷ்ணன், காரிமங்கலம்- மேற்கு சரவணன், பாலக்கோடு நகர்- பெரியசாமி, பாலக்கோடு கிழக்கு- பசுபதி, பாலக்கோடு மேற்கு- முருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
News April 5, 2025
தருமபுரி மாவட்டத்தில் 114 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 05 அங்கன்வாடி பணியாளர், 20 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 89 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <
News April 5, 2025
தர்மபுரி மின் நுகர்வோர் மறந்துவிடாதீர்

தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட மின் இணைப்புகளின் மின் கணக்கீடு சம்பந்தமான குறைபாடுகள், குறைந்த மின் அழுத்தம் புகார்கள் மின் மீட்டர் மற்றும் மின் கம்பம் மாற்றுதல் தொடர்பாக புகார் இருப்பினும் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு சிறப்பு முகாம் ஏப்ரல் 5 தர்மபுரி கோட்ட அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று செயற்பொறியாளர் தெரிவித்தனர்.