News August 28, 2025
தர்மபுரி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று(ஆக.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ மீனாட்சி மஹால், தர்மபுரி
▶️ PKS மண்டபம், பாப்பாரப்பட்டி
▶️ சமுதாயக் கூடம், மாதேஹள்ளி
▶️ VPRC கட்டடம், செல்லமுடி
▶️ VM மஹால் சிக்கமாரண்ட அள்ளி
▶️ ஸ்ரீ ராகவேந்திரர் மண்டபம், கொலகம்பட்டி
முகாம்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்கள் மனுக்களை அளித்து தீர்வு பெறலாம், தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News August 28, 2025
தர்மபுரி: கணவாயில் இத்தனை விபத்துக்கள் ?

தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு நெடுசாலையில் உள்ள தொப்பூர் கணவாய் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக அறியப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை 961 விபத்துக்கள் ஏற்பட்டு, 225 பேர் பலியானதாக தரவுகள் கூறுகின்றன. பெங்களூரில் இருந்து தமிழ்நாடு உள் வரும் போது சாலையின் உயரம் குறைவாக இருப்பதால், வேகத்தில் பிரேக் பெயிலியர் ஆவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனாலேயே இதை கொலைகார கணவாய் என்கின்றனர்.
News August 28, 2025
கிருஷ்ணகிரியில் அரசு பேருந்து விபத்து

நேற்று காவிேரிப்பட்டினத்தில் இருந்து தர்மபுரி சென்ற அரசு பேருந்தில் கார் பின்புறத்தில் மோதியது. காரில் இருந்து பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News August 27, 2025
ஆகஸ்ட் 29 ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி, மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி சமுதாய கூடம், பூதனஹள்ளி, மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி, பாலக்கோடு VPRC கட்டிடம், பி.கொல்லஅள்ளி, அரூர் VPRC கட்டிடம் ஜம்மனஹள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது