News August 6, 2025
தர்மபுரி மாவட்டத்தின் பெய்த மழை அளவு

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரூரில் 42.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கம்பைநல்லூரில் 32.2 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 16 மி.மீ, தீர்த்தமலையில் 6.6 மி.மீ, பாலக்கோடு சுகர்மில்லில் 6.5 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மற்றும் ஒகேனக்கல்லில் 3 மி.மீ மழையும், பென்னாகரத்தில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
Similar News
News August 7, 2025
தர்மபுரியில் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி பகுதி சேர்ந்த குப்பன் மகன் மாரியப்பன்(45), கூலி தொழிலாளி. கடத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற போது தர்மபுரியில் இருந்து வந்த வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடத்தூர் போலீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 6, 2025
விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த கலெக்டர்

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட உணவு பொருள் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (06.08.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட நியமன அலுவலர் மரு.P.K.கைலாஷ் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News August 6, 2025
தர்மபுரியில் ஷாக் அடித்து பெண் பலி

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள்(57). இவர் நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு வீட்டின் அருகில் இருந்த கம்பியில் துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். *எப்போதும் ஈரத்துடன் மின்கம்பிகளை தொடாதீர்கள் மக்களே. உங்கள் பகுதியில் மின் தொடர்பான குறை இருந்தால் (6380281341) வாட்ஸ்அப் பண்ணுங்க. *SHARE IT*