News September 28, 2025
தர்மபுரி மக்களே! இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

தர்மபுரி மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவும் உள்ளம் கொண்ட தர்மபுரி மக்களே இதனை SHARE பண்ணுங்க
Similar News
News February 17, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை (பிப் 18) நடைபெற உள்ளது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
News February 17, 2026
தருமபுரியில்: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி!

தண்டுக்காரன் அள்ளியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (29), முகமதுசையத் (26), ரூபன்குமார் (28). நேற்று இவர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் கொலசனஅள்ளி -வெள்ளிச்சந்தை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது பைக் விபத்துக்குள்ளானது. இதில் சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார், மற்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 17, 2026
தருமபுரி: ரோந்து பணி காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-16) இரவு முதல் இன்று காலை (பிப்-17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


