News August 28, 2025
தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540114>>தொடர்ச்சி<<>>
Similar News
News August 28, 2025
தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ மறைவு

தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R .சின்னசாமி இன்று காலை 10.30 மணி அளவில் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்நிலையில் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் 1971,1984 மற்றும் 1989 ஆண்டு தேர்தல்களில் தருமபுரி எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார்.
News August 28, 2025
தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தை பாதுகாப்பு பயன்பெற குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க
News August 28, 2025
தர்மபுரி: கணவாயில் இத்தனை விபத்துக்கள் ?

தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு நெடுசாலையில் உள்ள தொப்பூர் கணவாய் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக அறியப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை 961 விபத்துக்கள் ஏற்பட்டு, 225 பேர் பலியானதாக தரவுகள் கூறுகின்றன. பெங்களூரில் இருந்து தமிழ்நாடு உள் வரும் போது சாலையின் உயரம் குறைவாக இருப்பதால், வேகத்தில் பிரேக் பெயிலியர் ஆவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனாலேயே இதை கொலைகார கணவாய் என்கின்றனர்.