News April 25, 2025

தர்மபுரி: புகாரளிக்க செயலி (App) அறிமுகம்!

image

சட்டவிரோத போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TAMILNADU என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்கலாம். மேலும், Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்

Similar News

News December 19, 2025

தருமபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

தருமபுரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News December 19, 2025

தருமபுரி: தபால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அறிவிப்பு!

image

தர்மபுரி கோட்ட தபால் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. தபால் சேவைகள், சேமிப்பு வங்கி மற்றும் காப்பீடு தொடர்பான புகார்களை முழு விவரங்களுடன் தபால் கண்காணிப்பாளர் முகவரிக்கு வரும் 22-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என தபால் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

தருமபுரி: மகள் இழப்பை தாங்க முடியாமல் தாய் தற்கொலை!

image

மாரண்டஅள்ளி சீரியம்பட்டியைச் சேர்ந்த காயத்ரி (42), தனது மகள் கீர்த்தனா 7 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதால் கடும் மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மாத்திரைகளை உட்கொண்டு காயத்ரி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!