News May 28, 2024
தர்மபுரி தொப்பையாறு அணை சிறப்பு!

தர்மபுரியில் உள்ள தொப்பையாறு அணை, சென்னை-கள்ளிக்கோட்டை ஏழாம் தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ள உப்பாளம்மன் கோயிலருகே தொப்பையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 1986 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை 299 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. பாசனவசதிக்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் இந்த அணை கட்டப்பட்டது.
Similar News
News April 20, 2025
தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பில் கோடை கால பயிற்சி முகாம் வருகின்ற 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 15 ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் இந்த பயிற்சி குறித்து விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.
News April 20, 2025
தர்மபுரி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! நல்லம்பள்ளி -9384094838, 04342-244456, காரிமங்கலம்-9384094839, 04348-242411, தர்மபுரி -9445000533, 04342-260927, பென்னாகரம்-9445000536, 04342-255636, அரூர் – 9445000534, 04346-222023, பாப்பிரெட்டிப்பட்டி -9445000535, 04346-246544, பாலக்கோடு – 9445000537, 04348-222045. *முக்கிய நம்பர்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News April 20, 2025
தருமபுரி: கணவன்/மனைவி சண்டை நீங்க செல்ல வேண்டிய கோவில்

தருமபுரியில் கோவில் கொண்டிருக்கும் கல்யாண காமாட்சி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். தமிழகத்தில் சூலினிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவில். வளர்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு பூஜை செய்தால், கணவன்-மனைவிக்குள் எப்பேர் பட்ட சண்டையாய் இருந்தாலும் தீர்ந்து ஒற்றுமையாய் இருப்பர் என்பது பக்தர்களிள் அசைக்க முடியாத நம்பிக்கை. உங்கள் கணவன்/மனைவி அடிக்கடி சண்டை போட்டால் இங்கு செல்லுங்கள். *நண்பர்களுக்கும் பகிரவும்*