News September 8, 2025

தர்மபுரி: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது

image

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எண்டப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட முருகன் (49), செல்வம் (60), மாது (56) ஆகிய மூவரையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகளும், ₹150 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 8, 2025

தர்மபுரி: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

தர்மபுரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். அவசியம் SHARE பண்ணுங்க

News September 8, 2025

ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் திடீர் வேலைநிறுத்தம்

image

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில், பரிசல் சவாரிக்குச் செப். 7-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பரிசல் ஓட்டிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறந்த பரிசல் ஓட்டிகளின் வாரிசுகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதனால், பரிசல் சவாரி செய்ய முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

News September 8, 2025

தர்மபுரி: கிராம வங்கியில் வேலை

image

தர்மபுரி மக்களே; கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>CLICK<<>> செய்து செப்.21க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!