News March 18, 2024

தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதற்கும் 45பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்;1800 425 7017 மற்றும் 9363754335 என்ற whatsapp குறுந்தகவல் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

தருமபுரி: ஒகேனக்கலில் குளிக்க அனுமதி

image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து சரிவு. நேற்று (அக்.28) மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,500 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,000 கன அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News October 29, 2025

சட்டவிரோத மண் கடத்தல்: லாரி பறிமுதல்

image

இன்று அக்.28 காரிமங்கலம் மொரப்பூர் மேம்பாலம் அருகே கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரியை மடக்கினர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த லாரி கரகப்பட்டியில் இருந்து சட்ட விரோதமாக மண் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 28, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்..

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-28) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்…

error: Content is protected !!