News September 5, 2025

தர்மபுரி: கடைக்கு போறதுக்கு முன் இத பாருங்க

image

கடைகளில் கூடுதல் விலைக்கு (ம) காலாவதியான பொருட்களை விற்கும் போது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். இதில் வக்கீல் இன்றி நாமே புகார் செய்து உரிய நஷ்டஈடு பெற முடியும். confo-dh-tn@nic.in என்ற இ-மெயிலில், 044-25340050 (மாநில ஆணையம்) (அ ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. <<17618164>>தொடர்ச்சி<<>>

Similar News

News September 7, 2025

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தை பற்றி தெரியுமா?

image

தர்மபுரி, தீர்த்தமலையில் அமைந்துள்ளது தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம். தீர்த்தங்களால் சூழப்பட்ட தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் மூலிகைகள் கலந்து இருப்பதால், நீராடுபவர்கள் உடற்பிணி, உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர். மேலும் இக்கோயிலில் கடன் தொல்லை தீர வேண்டுவதுடன், குழந்தை வரம் வேண்டியும் வழிபடுகின்றனர். ஷேர் பண்ணுங்க!

News September 7, 2025

தர்மபுரியில் 2 லட்சம் பேருக்கு உரிமை தொகை

image

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் படி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 2,84,091 நபர்கள் பயனடைந்துள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

News September 7, 2025

து.முதல்வரை சந்தித்த தருமபுரி நிர்வாகிகள்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திமுக மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுந்தர் சந்தித்து புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் திமுக மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!