News April 1, 2024

தர்மபுரி உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பு

image

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் திமுக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் மணியை ஆதரித்து உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News

News August 15, 2025

இன்னுயிர் கொடுத்த தருமபுரி மாவட்ட தியாகிகள்

image

பல தலைவர்கள் தங்கள் உயிர், உடைமை, உதிரம், இளமை என எல்லாவற்றையும் இழந்து இந்திய தேசத்தின் விடுதலையை பெற்று தந்துள்ளனர். இந்த 79வது சுதந்திர தினத்தில் தருமபுரி மாவட்ட தியாகிகளை பற்றி நினைவு கூறுவோம்.
✔ சிவகாமி அம்மையார் – இளம் வயதிலேயே இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து விடுதலைக்காக போராடியவர்.
✔ டி.என். தீர்த்தகிரியார் – இந்திய விடுதலைக்காக 8 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர்.
ஷேர் பண்ணுங்க!

News August 14, 2025

தர்மபுரி: இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மற்றும் அரூர்க்கு (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தருமபுரி தலைமை அதிகாரியாக சிவராமன், அரூர் கரிகால் பாரி சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மற்றும் அரூர்‌ சுற்றியுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

News August 14, 2025

தர்மபுரியில் இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!