News August 26, 2025

தர்மபுரி இளைஞர்கள் கவனத்திற்கு

image

தர்மபுரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் காகித உறை பைகள் & காகித கோப்புகள் தயாரித்தல் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. உணவு, சிற்றுண்டி உண்டு. பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். தொடர்புக்கு 04342 230511,8667679474 அழைக்கவும்

Similar News

News August 26, 2025

தர்மபுரி: தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

image

தர்மபுரி மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். SHARE பண்ணுங்க! விபரங்களுக்கு <<17520461>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க.

News August 26, 2025

அச்சுத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை

image

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி, அதன் மேல்புறம் self Attested செய்ய வேண்டும். விண்ணப்பத்தை வரும் 19.09.2025 தேதி மாலை 5.30 மணிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

தர்மபுரி: வீலில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு

image

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி இந்திரா. இருவரும் நேற்று மாலை ஆரூரில் இருந்து தர்மபுரிக்கு மொபெட்டில் வந்தனர். அப்போது இந்திராவின் சேலை மொபெட் வீலில் சிக்கி இருவரும் கீழே விழுந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!