News September 19, 2025
தர்மபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தர்மபுரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
தர்மபுரி: கொலை வழக்கில் ஆயுள் தணடனை

தர்மபுரி கொலை வழக்கு தொடர்பாக நிர்மலா, கள்ளக்காதலன் அபினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று நீதிபதி மோனிகா தீர்ப்பு அளித்தார், அதில் நிர்மலாவுக்கும், அபினேஷ்க்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.
News September 19, 2025
தர்மபுரி மாவட்ட விவசாயிகளே தவறவிடாதீர்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (செப்டம்பர் .19) இன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 19, 2025
தர்மபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் (செப்டம்பர்-19) இன்று நடைபெறும் இடங்களின் விவரம்; தருமபுரி பேருந்து நிலையம் எதிரில் எட்டிமரத்துபட்டி சமுதாயக்கூடம், நல்லம்பள்ளி நாகர்கோவில் ஊராட்சி அலுவலகம், மொரப்பூர் சிங்காரவேலன் மண்டபம், காரிமங்கலம் சமுதாயக்கூடம், பாலக்கோடு கும்மனூர் சமுதாயக்கூடம், அரூர் சுங்காலூர் பி.பி.ஆர்.சி.கட்டிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.