News September 11, 2025

தர்மபுரி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

image

தர்மபுரி, காரிமங்கலத்தில் அரசு பதிவு பெறாமல் இயங்கிவந்த 32 செங்கல் சூளைகளுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு புவியியல் & சுரங்கத்துறையின் இணையதளத்தில் செப்.,3-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூளைகள் இணையதளத்தில் பதிவு செய்யாததால், மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார் இந்த சூளைகளை சீல் வைக்க காரிமங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 11, 2025

தகடூர் மன்னன் அதியமானைப் பற்றி தெரியுமா?

image

சங்க காலத்தில் இன்றைய தருமபுரி மாவட்டம் தகடூர் என அழைக்கப்பட்டது. இதனை சேரர் மரபைச் சேர்ந்த அதியமான் நெடுமானஞ்சி ஆட்சி செய்து வந்தார். இவர் இறும்பொறையூர், ஆரைக்கால் என அழைக்கப்பட்ட இன்றைய நாமக்கல் பகுதியையும் ஒருசேர ஆண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சாகாவரம் பெற நெல்லிக்கனியை ஒவைக்கு அளித்ததால், இவர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார். இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகவும் திகழ்கிறார். ஷேர் பண்ணுங்க!

News September 11, 2025

தருமபுரி: சொந்த ஊரில் அரசு வேலை!

image

தருமபுரி, ஊரக வளர்ச்சி & ஊரகத் துறை சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
▶️ஈப்பு ஓட்டுநர்-ரூ.19,500-ரூ.71,900
▶️பதிவறை எழுத்தாளர்- ரூ.15,900-ரூ.58,500
▶️அலுவலக உதவியாளர்-ரூ.15,700-ரூ.58100
▶️இரவு காவலர்-ரூ.15,700-ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
▶️கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
▶️விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்., 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. <>மேலும் தகவலுக்கு<<>>.
ஷேர் பண்ணுங்க!

News September 11, 2025

எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி: தருமபுரி மாணவிகள் சாதனை

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட தனியார் கல்லூரி மாணவி நர்மதா மாநில அளவில் மூன்றாம் இடமும், ரோஜா மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தனர். சென்னையில் நடைபெற்ற விழாவில் சுகாதார துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

error: Content is protected !!