News March 19, 2024
தர்மபுரி அருகே விபத்து

அரூர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு 28. இவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டியானூர் கிராமத்தை சேர்ந்த பரிமளா 29 என்பவரை டூவீலரின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு சென்றார். பறையபட்டி அரசுப்பள்ளி எதிரே வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 9, 2025
தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி, 4 பேர் படுகாயம்

நேற்று, புலிகரையை சேர்ந்த கோவிந்தன் (60) பாலக்கோடு நோக்கி டூ வீலரில் சென்றார். கசியம்பட்டி மேம்பாலத்தில் சென்ற போது அங்கிருந்த மரத்தில் இருந்த தேனீக்கள் திடீரென அவரை கொட்டின. மேலும் அப்பகுதியில் வந்த 4 நான்கு பேரையும் தேனீக்கள் கொட்டி படுகாயம் அடைந்தனர். அனைவரும் பாலக்கோடு ஜி.ஹெச்-இல் சேர்த்த நிலையில் வரும் வழியிலேயே கோவிந்தன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 8, 2025
தர்மபுரி: போட்டி தேர்வுக்கு பயின்ற வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

அரூர், ஈட்டியம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). பட்டதாரியான இவர், நாமக்கல் பகுதியில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் தங்கி படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். வீட்டில் சோகமாக இருந்த அவர், தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. அதன்பின் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News April 8, 2025
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்: திட்ட அறிக்கை பணி தீவிரம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிக்காக ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் வருகின்ற ஜூன் மாதம் திட்ட அறிக்கை தயார் செய்து டெண்டர் விடப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று தெரிவித்தார்.