News October 16, 2024
தர்மபுரி அருகே வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியைச் சார்ந்த மனோஜ்குமார். திருமணம் ஆகி மனைவி இறந்து விட்ட நிலையில், அதே பகுதியைச் சார்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியைப் பின்தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகியுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், தலைமறைவான வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 24, 2025
பத்திரிக்கையாளர் அலுவலகத்தை திறந்த எம்.பி ஆ.மணி

தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஒதுக்கியுள்ள பத்திரிகையாளர் அலுவலகம் திறப்பு விழா (நவ.24)இன்று நடைபெற்றது. தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரெ.சதீஷ் மற்றும் வழக்கறிஞர் ஆ.மணி எம்பி ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
News November 24, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆட்சியர் சதீஸ் சான்றிதழ்!

இன்று (நவ.24) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அத மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தருமபுரி,அரூர், காரிமங்கலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தனர். இந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆட்சியர் சதீஸ், (நவ-24) சான்றிதழ்களை வழங்கினார்.
News November 24, 2025
கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சதீஸ்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் சதீஸ் இன்று (நவ.24) பெற்றுக்கொண்டார்கள்.பொதுமக்களிடமிருந்து 530 கோரிக்கை மனுக்களை மாவட்ட சதீஸ் பெற்றுக்கொண்டார்கள். உடன் அரசு துறை அலுவலர்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


