News April 16, 2024
தர்மபுரி அருகே மாணவியின் விபரீத செயல்

பாப்பாரப்பட்டி சேர்ந்த பூங்காவனம் அவரது மனைவி தேவி.இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நேற்று மீண்டும் குடும்ப பிரச்சினையில் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகள் புனிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன. அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா உயிரிழந்தார்.
Similar News
News August 14, 2025
தருமபுரியில் சுதந்திர தின சிறப்பு சலுகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த தருமபுரி மண்டல பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையின்படி வாடிக்கையாளர்கள் ரூ.1க்கு அதிவேக 4G சிம் பெறலாம். இத்துடன், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 இலவச குறுந்தகவல்கள், வரம்பற்ற அழைப்புகள் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஷேர்
News August 14, 2025
பயிர்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்

தர்மபுரி மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், காரி பருவ பயிர்களான நெல், சோளம், நிலக்கடலை ஆகியவற்றுக்கு காப்பீடு செய்ய இன்றே (ஆகஸ்ட் 14) கடைசி நாள். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
தர்மபுரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் இயங்க தடை

தருமபுரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் அனைத்தும் 14.8.2025 இரவு 10.00 மணி முதல் 16.8.2025 காலை 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்