News September 19, 2025

தர்மபுரியை நெருங்கும் ஆபத்து – உஷார் மக்களே!

image

தர்மபுரி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கே.ஆர்.பி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் இன்று அதிகளவிலான உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தர்மபுரி தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News September 19, 2025

தர்மபுரி: கொலை வழக்கில் ஆயுள் தணடனை

image

தர்மபுரி கொலை வழக்கு தொடர்பாக நிர்மலா, கள்ளக்காதலன் அபினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று நீதிபதி மோனிகா தீர்ப்பு அளித்தார், அதில் நிர்மலாவுக்கும், அபினேஷ்க்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.

News September 19, 2025

தர்மபுரி மாவட்ட விவசாயிகளே தவறவிடாதீர்

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (செப்டம்பர் .19) இன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

தர்மபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் (செப்டம்பர்-19) இன்று நடைபெறும் இடங்களின் விவரம்; தருமபுரி பேருந்து நிலையம் எதிரில் எட்டிமரத்துபட்டி சமுதாயக்கூடம், நல்லம்பள்ளி நாகர்கோவில் ஊராட்சி அலுவலகம், மொரப்பூர் சிங்காரவேலன் மண்டபம், காரிமங்கலம் சமுதாயக்கூடம், பாலக்கோடு கும்மனூர் சமுதாயக்கூடம், அரூர் சுங்காலூர் பி.பி.ஆர்.சி.கட்டிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!