News September 13, 2025
தர்மபுரியில் 3 லட்சம் ஆண்டு பழமையான கருவிகள் கண்டெடுப்பு

தர்மபுரி மாவட்டம், குட்லாம்பட்டி கிராமத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கள ஆய்வில், 3 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய கற்கால மற்றும் 5,000 ஆண்டுகள் பழமையான நுண் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய 200க்கும் மேற்பட்ட கற் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது இப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இதில், கைக்கோடரிகள், வெட்டுக் கருவிகள், சுரண்டும் கருவிகள் போன்றவை அடங்கும்.
Similar News
News September 13, 2025
தர்மபுரி: திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமி கடத்தல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள செங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமி முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
News September 13, 2025
தருமபுரியில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார். ஷேர்
News September 13, 2025
பருத்தி, துவரைக்கு பயிர் காப்பீடு செய்ய அதிகாரி அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காரி பருவப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.13,978 வரையும், துவரைக்கு ரூ.17,000 வரையும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். துவரைக்கு செப்டம்பர் 16-ம் தேதியும், பருத்திக்கு செப்டம்பர் 30-ம் தேதியும் விண்ணப்பிக்க கடைசி நாள் என வேளாண் இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.