News August 17, 2025

தர்மபுரியில் 1,705 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா

image

தர்மபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ₹1705 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், முடிக்கப்பட்ட திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ₹3458.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 20, 2025

தருமபுரி இளைஞர்களுக்கு விமான படையில் வேலை

image

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு இந்திய விமான படையில் அக்னிவீர் (வாயு) (OS) பணிக்கு ஆட்சேர்ப்பு , தாம்பரம் விமானப்படை வளாகத்தில் செப்டம்பர் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு ஜூலை 1, 2025 அன்று நிலவரப்படி, 17 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

ஒகேனக்கல் ஆற்றில் 1,45,000 கன அடி தண்ணீர் வத்து

image

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு நேற்று இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக S.கரிகால் பாரிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி‌ புஷ்பராணி, அரூர் செந்தில்ராஜ், பென்னாகரம் முரளி மற்றும் பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!