News September 3, 2025
தர்மபுரியில் லோன் வாங்குபவரா நீங்கள்?

தர்மபுரி மக்களே, நம்முடைய அவசரத் தேவைக்கு ஆன்லைன் லோன் ஆப் மூலம் லோன் வாங்கி விடுகிறோம். ஆனால், அதனை உரிய நேரத்தில் கட்ட முடியாமல் போய் விடும். இதனால் அந்த நிறுவனங்கள் நமக்கு அதிக வட்டி விதிப்பது, நம்முடைய புகைப்படங்களை மார்ப் செய்வது, நம்முடைய உறவினர்களுக்கு ஃபோன் செய்து மிரட்டுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் 1930 என்ற எண்ணிலோ <
Similar News
News April 11, 2026
காரிமங்கலம்: கிணற்றில் டிராக்டருடன் விழுந்தவர் பலி

காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (50) என்ற தொழிலாளி, டிராக்டரில் சென்றபோது எதிர்பாராத விதமாக மல்லிகுட்டை பகுதியில் உள்ள கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை மீட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 11, 2026
தருமபுரியில் தாய்க்காக களம் இறங்கிய மகள்கள்

தருமபுரி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து, அவரது மகள்கள் சம்யுக்தா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று அவர்கள் வாக்கு சேகரித்தது பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தாயின் வெற்றிக்காக மகள்கள் களமிறங்கியுள்ளது தேர்தல் களத்தில் நெகிழ்ச்சியையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
News April 11, 2026
பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 09.04.2026 காலை 6.00 மணி முதல் 10.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


