News June 5, 2024
தர்மபுரியில் லேசான மழைக்கு வாய்ப்பு!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
Similar News
News August 28, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.28) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக மனோகரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 28, 2025
தருமபுரியில் விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்பு.

தருமபுரி மாவட்டத்தில், விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13,058 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 12,319 விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார். இந்த இணைப்புகள் 01.04.2021 முதல் 31.03.2025 வரையிலான காலத்தில் வழங்கப்பட்டுள்ளன
News August 28, 2025
தருமபுரியில் பேச்சுப் போட்டிகள்: மாணவர்களுக்கு அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டுப் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. செப்.1 அண்ணாவுக்கும், செப்.2 பெரியாருக்கும் போட்டிகள் நடைபெறும். தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வுகள் நடக்கும். இதில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.