News March 14, 2025
தர்மபுரியில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (50), இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம், பூந்தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சின்னசாமி சென்றுள்ளார். அப்போது கீழே கிடந்த ஒயரை எதிர்பாராத விதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிசென்று பரிசோதித்த பொழுது,ஏற்கனவே சின்னசாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News March 3, 2026
தருமபுரி: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில்<
News March 3, 2026
தருமபுரி ஆட்சியர் உத்தரவு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தலைமையில் நேற்று (02.03.2026) நடைபெற்றது. இந்த மக்கள் குறை கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 606 மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
News March 3, 2026
தருமபுரி: தூக்கில் தொங்கிய மாணவன்

தருமபுரி அருகே உள்ள வி.ஜெட்டி அள்ளி இளங்கோநகர் பகுதியை சேர்ந்தவர் அருள் கணேஷ், தொழிலாளி. இவருடைய மகன் கவுதம்ராவ் (வயது 15). தோக்கம்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த கவுதம்ராவ் திடீரென பாட்டி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.


