News July 9, 2025

தர்மபுரியில் மகளிர் உரிமை தொகை குறித்து அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அளிக்கலாம். இந்த முகாமானது வரும் 15 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *SHAREIT*

Similar News

News September 20, 2025

தருமபுரி: குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே உஷார்!

image

தருமபுரி அன்னசாகரம் எரங்காட்டுக்கொட்டாய் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை ஒருவர் கடத்த முயன்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் இந்த செயல் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை முழு கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்

News September 20, 2025

தர்மபுரி: PF எண்னை மறந்தால் என்ன செய்வது?

image

தர்மபுரி மக்களே! EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <>கிளிக் <<>>செய்து மீட்கலாம்.
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம். ஷேர் பண்ணுங்க!

News September 20, 2025

தருமபுரி: டிகிரியும் தமிழும் போதும்! வங்கியில் வேலை

image

IBPS பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13,217 காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 688 ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் கணினி திறனும் பெற்று இருக்க வேண்டும். ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT!

error: Content is protected !!