News August 2, 2024
தர்மபுரியில் புதிய 10 பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

தர்மபுரி பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடத்திற்கு 10 அரசு பேருந்துகளை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார். இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி ஐ வெங்கடேஸ்வரன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, நகர செயலாளர் லட்சுமி நாட்டான் மாது, மற்றும் துறை சார் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 23, 2025
BREAKING: தர்மபுரி: போக்சோ கைதியான ஆசிரியர் மரணம்!

தர்மபுரி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கடந்த நவ.16ஆம் தேதி பாலியல் தொல்லை தந்த சமூக அறிவியல் ஆசிரியர் மணிவண்ணன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தார். இந்நிலையில், நேற்று(டிச.22) இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது உயிரிழந்தார்.
News December 23, 2025
தர்மபுரி: கிணற்றில் தவறி விழுந்து துடிதுடித்து பலி!

பாபிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி(85). இவருடைய மனைவி கண்ணம்மாள்(80). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், நெற்று(டிச.22) காலை தனது தோட்டத்தின் பக்கத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கண்ணம்மாள், மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொம்மிடி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 23, 2025
தர்மபுரி: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

பென்னாகரம் அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார்(26) என்பவர் 12 வயது சிறுமிக்கு பாலிஅய்ல் தொல்லை தந்துள்ளார். இதனால், காயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிறுமி அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நவீன் குமாரை கைது செய்தனர்.


