News September 12, 2025

தர்மபுரியில் நாளுக்கு நாள் வளரும் அதிசய சிவலிங்கம்

image

தர்மபுரியில் அமானி மல்லாபுரத்தில் உள்ள சுயம்புலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு நடைபெறும் மாத சிவராத்திரி, மார்கழி திருவாதிரை மற்றும் பிரதோஷ பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். கல்வி சிறக்க, திருமணத் தடை நீங்க மற்றும் ஜாதக தோஷங்கள் விலக பக்தர்கள் வழிபடும் முக்கிய இடமாக திகழ்கிறது. இந்த அதிசய கோயிலை பற்றி மற்றவருக்கும் பகிருங்கள்.

Similar News

News September 12, 2025

தருமபுரி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை (செப்.13) அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)

News September 12, 2025

தர்மபுரியில் நாளை மறுதினம் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

தர்மபுரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில், தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் உத்தரவின்படி, நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை, இரு தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தை மூலம் முடித்துக்கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமகள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

தருமபுரியில் கேன் தண்ணீர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தருமபுரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!