News July 11, 2025
தர்மபுரியில் நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி

தர்மபுரி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் 26 நாட்கள் நாட்டுக்கோழி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பெயரை TNSDC இணையத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வருகின்ற 14/7/2025-12/8/2025 வரை நடைபெறும். மேலும் தகவலுக்கு 9677565230 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தவறாமல் கலந்துகொள்ளுங்கள் மக்களே. நிட்சயம் உதவியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 11, 2025
நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்தில் பொது ஏலம்

தருமபுரி மாவட்ட உதவி செயற்பொறியாளர (சா ம பா),தருமபுரி மற்றும் மொரப்பூர் உபகோட்ட அலுவலக பயன்பாட்டில் இருந்து கழிவுநீக்கம் (Scrapping) செய்யப்பட்ட ஈர்ப்பு எண் TN 29 G 0470 (Tata Spacio (D) TN 29G 0472 (Bolero Lx (D) ) ஆகிய 2 வாகனங்கள் வரும் 18 அன்று பிற்பகல் 12.00 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News July 11, 2025
ரூ. 12 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூ. 12 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு, பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை 30.11.2025க்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
காவல்துறை இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல்

தர்மபுரியில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தலைமை அதிகாரியாக திரு. எஸ். ஜே. சபாபதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு காவலர்கள் விவரம் மேலே உள்ளன. தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க